தூக்கமின்மைக்கு பல தீர்வுகள்

  • தூங்குவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும். அப்போது தான் நன்கு ஜீரணமாகும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே இரவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
  •  தூக்கம் பிரச்னை உள்ளவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். காபியில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும்.
  • இரவு படுக்கைக்கு செல்லும் முன் வெந்நீரில் குளித்தால் நன்றாக தூக்கம் வரும்.
  • தினமும் சரியான நேரத்துக்கு தூங்கச் செல்லுங்கள்
  • அலுவலகத்தை அலுவலகத்திலேயே விட்டு விட்டு வருதல்.
  • இரவில் படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரு டம்ளர் பால் அருந்துங்கள்.
  • பதப்படுத்தப்பட்ட மற்றும் ரெடிமேட் உணவுகள் சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.
  • மசாலா உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களை இரவு நேரங்களில் உண்ணக்கூடாது. இட்லி போன்ற ஆவியில் வேக வைத்த எளிதில் ஜீரணம் ஆகும் உணவு வகைகளை சாப்பிட்டால் நல்ல உறக்கம் வரும்.
  • பழ வகைகளை இரவு சாப்பிடுவது நல்லது, அதிலும் குறிப்பாக ஆப்பிள், கொய்யாப்பழம், சாத்துக்குடி, பப்பாளி மற்றும் கருப்பு திராட்சை ஆகியவை தூக்கத்துக்கு மிகவும் நல்லது.
  • தினமும் உணவில் கீரை சேர்த்துக்கொள்வது பலவகை பிரச்சினைகளை தீர்க்கும்.
  • தூக்கம் வராமல் தவிக்கும் வயதானவர்கள் உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்
  • எளிதில் ஜீரணமடையாத கோதுமை மற்றும் கேழ்வரகு போன்ற தானிய வகை உணவுகளைகைரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
  • மன அழுத்தம் குறைய யோகா மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment