அன்பு நண்பர்களே
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தற்போது தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு சூடான செய்தி. அவ்வாறு இவ்வளவு பிரபலமாக பேசப்படும் அளவுக்கு இந்த தேர்தல் அமைந்ததற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை தற்போது பார்ப்போம்.
- ஆளும் அரசு தனித்து ஆட்சியமைக்கும் பலத்தால், தன் கூட்டணிக்கட்சிகளை தந்திரமாக உள்ளாட்சித்தேர்தலில் தவிர்தததன் மூலம் கூட்டணிக்கட்சிகளின் ஒட்டுமொத்த வெருப்பையும் கொண்டிருக்கிறது.
- ஆளும் அ.தி.மு.க அரசு தனது பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போன்ற தோற்றத்துடன் உள்ளாட்சித்தேர்தலை சந்தித்து அதில் பெரும்பாலான இடங்களில் வெற்றியும் பெற்றது.
- வெற்றி பெற்றவுடன் அரசுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் உள்ளதால் தவிர்க்க முடியாமல் உயர்த்தியது போல் பால் மற்றும் பேருந்துக்கட்டணங்களையும் ஒரேயடியாக உயர்த்தியது. அதன்மூலம் பொதுமக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்தது. அதற்காக கட்டண உயர்வை ஒரேயடியாக குறை கூற விரும்பவில்லை. அதற்கு பதிலாக சிறிது சிறிதாக குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்த்தியிருக்கலாம் அல்லது அரசின் நிலையை விளக்கிக்கூறி இலவசப் பொருட்களை வழங்குவதை மக்களின் ஆதரவுடன் தவிர்த்து, கட்டண உயர்வை கட்டுப்படுத்தியிருக்கலாம்.
- தற்போதய மின்பற்றாக்குறையைப் போக்க மந்தமான நடவடிக்கைகள்.
- இவையெல்லாவற்றிற்கும் மேலாக இடைத்தேர்தல் தொடர்பாக சட்டசபையிலேயே விடப்பட்ட பகிரங்க சவால்கள்
இவையெல்லாம் ஆளும் அரசுக்கு எதிராக இருப்பினும், இப்போதே வேட்பாளரை அறிவித்து, தன் ஒட்டுமொத்த அமைச்சர்களையும் தொகுதியில் உலா விட்டுருப்பதன் மூலம் அரசின் திட்டங்களும் பல உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றின் மூலம் தேர்தலை வெற்றி கொள்ளமுடியும் என நம்புகிறது எனபதே உண்மை.
அநேகமாக சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரை சட்டசபையை கூட சங்கரன்கோவிலில்தான் நடத்துவார்கள் என்று தோன்றுகிறது, ஏனெனில் அ.தி.மு.க வின் ஒட்டு மொத்த சட்டசபை உறுப்பினர்களும் அங்கு தான் கூடாரமிட்டுள்ளனர்.
நிலைமை எவ்வாறு இருப்பினும் தற்போதய எதிர்க்கட்சிகளின் அறிவிப்பின்படி தி.மு.க மற்றும் ம.தி.மு.க கட்சிகள் மட்டுமே போட்டிக்கு தயாராக உள்ளது. மற்ற முக்கியமான கட்சிகளான தே.மு.தி.க (தமிழகத்தின் சட்டசபை எதிர்க்கட்சி) மற்றும் பா.ம.க ஆகியவை தேர்தலை புறக்கணித்திருப்பது அக்கட்சிகளின் பலமின்மையையும் அரசின் சவாலை தோல்வி பயத்தால் எதிர்க்க யோசிப்பதுபோல் தோன்றுகிறது.
இருப்பினும் இக்கட்சிகள் தங்கள் ஆதரவை அ.தி.மு.க அல்லாத இதர போட்டியிடும் கட்சிகளுக்கு அளிக்கும் என்றே தெரிகிறது.
என்ன இருப்பினும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னமே, ஆளும் கட்சி தன் சுயபலத்தை நம்பாமல் தன் அமைச்சர் பட்டாளத்தின் துணையை நாடியிருப்பதும் வேட்பாளரின் பெயரை அறிவித்திருப்பதும் (இதை எழுதுவது வரை மாற்றப்படவில்லை) அரசிற்கு தோல்வி பயம் உள்ளதையே உணர்த்துகிறது.
எனவே வாக்களப்பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குகளை, அபிமான சின்னத்திற்கு அளிக்காமல் தங்களுக்கு அறிமுகமான, படித்த, துடிப்பான நல்ல (ஓரளவாவது) வேட்பாளருக்கு தங்கள் வாக்குகளை அளியுங்கள்.
No comments:
Post a Comment