தூக்கமின்மைக்கு பல தீர்வுகள்

  • தூங்குவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும். அப்போது தான் நன்கு ஜீரணமாகும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே இரவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
  •  தூக்கம் பிரச்னை உள்ளவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். காபியில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும்.
  • இரவு படுக்கைக்கு செல்லும் முன் வெந்நீரில் குளித்தால் நன்றாக தூக்கம் வரும்.
  • தினமும் சரியான நேரத்துக்கு தூங்கச் செல்லுங்கள்
  • அலுவலகத்தை அலுவலகத்திலேயே விட்டு விட்டு வருதல்.
  • இரவில் படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரு டம்ளர் பால் அருந்துங்கள்.
  • பதப்படுத்தப்பட்ட மற்றும் ரெடிமேட் உணவுகள் சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.
  • மசாலா உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களை இரவு நேரங்களில் உண்ணக்கூடாது. இட்லி போன்ற ஆவியில் வேக வைத்த எளிதில் ஜீரணம் ஆகும் உணவு வகைகளை சாப்பிட்டால் நல்ல உறக்கம் வரும்.
  • பழ வகைகளை இரவு சாப்பிடுவது நல்லது, அதிலும் குறிப்பாக ஆப்பிள், கொய்யாப்பழம், சாத்துக்குடி, பப்பாளி மற்றும் கருப்பு திராட்சை ஆகியவை தூக்கத்துக்கு மிகவும் நல்லது.
  • தினமும் உணவில் கீரை சேர்த்துக்கொள்வது பலவகை பிரச்சினைகளை தீர்க்கும்.
  • தூக்கம் வராமல் தவிக்கும் வயதானவர்கள் உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்
  • எளிதில் ஜீரணமடையாத கோதுமை மற்றும் கேழ்வரகு போன்ற தானிய வகை உணவுகளைகைரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
  • மன அழுத்தம் குறைய யோகா மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

சென்னை என்கவுன்டர் படங்கள்

செ‌ன்னை‌யி‌ல் 5 கொ‌ள்ளைய‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் எ‌ப்படி எ‌ன்கவு‌ண்ட‌ர் செ‌ய்தன‌ர் எ‌ன்பதை இ‌ந்த பட‌ம் மூல‌ம் வாசக‌ர்க‌ள் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.


கொ‌ள்ளைய‌ர்களா‌ல் காய‌ம் அடை‌ந்த காவ‌ல‌ர்க‌ள்.


சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட கொ‌ள்ளைய‌ன்.


எ‌ன்கவு‌ண்டரை செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் ‌விள‌க்க‌ம் செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ‌தி‌ரிபா‌தி.


கொ‌ள்ளைய‌ர்க‌ள் பய‌‌ன்படு‌த்‌திய து‌ப்பா‌க்‌கி.


எ‌ன்கவு‌ண்ட‌‌ரி‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட கொ‌ள்ளைய‌ர்க‌‌ளி‌ன் ர‌‌த்த‌ம்.


எ‌ன்கவு‌ண்ட‌‌ரி‌ல் ‌சித‌றி‌க் ‌கிட‌க்கு‌ம் பொரு‌ள்.


கொ‌ள்ளைய‌ர்க‌ளி‌‌ன் பொரு‌ட்க‌ள்.


எ‌ன்கவு‌ண்ட‌ர் நட‌ந்த ‌‌வீ‌ட்டி‌ன் மு‌ன் கூடி ‌நி‌ற்கு‌ம் ம‌க்க‌ள்.


வீ‌ட்டி‌ல் ‌சித‌றி ‌கிட‌க்கு‌ம் ர‌த்த‌ம்.


எ‌ன்கவு‌ண்ட‌லி‌ல் காய‌ம் அடை‌ந்த காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர்.


கொ‌ள்ளைய‌ர்க‌ள் த‌ங்‌கி‌‌யிரு‌ந்த ‌வீ‌ட்டி‌ன் மு‌ன் பகு‌தி.


எ‌ன்கவு‌ண்ட‌‌‌ர் நட‌ந்த ‌வீ‌ட்டி‌ல் காவ‌ல‌ர்க‌ள், செ‌ய்‌தியாள‌ர்க‌ள்,


எ‌ன்கவு‌ண்ட‌ர் நட‌ந்த ‌வீ‌ட்டி‌ன் மு‌ன்பு காவ‌ல‌ர்க‌ள் கு‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.














 நன்றி - வெப்துனியா

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் - ஒரு பார்வை

அன்பு நண்பர்களே

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தற்போது தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு சூடான செய்தி. அவ்வாறு இவ்வளவு பிரபலமாக பேசப்படும் அளவுக்கு இந்த தேர்தல் அமைந்ததற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை தற்போது பார்ப்போம்.
  • ஆளும் அரசு தனித்து ஆட்சியமைக்கும் பலத்தால், தன் கூட்டணிக்கட்சிகளை தந்திரமாக உள்ளாட்சித்தேர்தலில் தவிர்தததன் மூலம் கூட்டணிக்கட்சிகளின் ஒட்டுமொத்த வெருப்பையும் கொண்டிருக்கிறது.
  • ஆளும் அ.தி.மு.க அரசு தனது பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போன்ற தோற்றத்துடன் உள்ளாட்சித்தேர்தலை சந்தித்து அதில் பெரும்பாலான இடங்களில் வெற்றியும் பெற்றது.
  • வெற்றி பெற்றவுடன் அரசுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் உள்ளதால் தவிர்க்க முடியாமல் உயர்த்தியது போல் பால் மற்றும் பேருந்துக்கட்டணங்களையும் ஒரேயடியாக உயர்த்தியது. அதன்மூலம் பொதுமக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்தது. அதற்காக கட்டண உயர்வை ஒரேயடியாக குறை கூற விரும்பவில்லை. அதற்கு பதிலாக சிறிது சிறிதாக குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்த்தியிருக்கலாம் அல்லது அரசின் நிலையை விளக்கிக்கூறி இலவசப் பொருட்களை வழங்குவதை மக்களின் ஆதரவுடன் தவிர்த்து, கட்டண உயர்வை கட்டுப்படுத்தியிருக்கலாம்.
  • தற்போதய மின்பற்றாக்குறையைப் போக்க மந்தமான நடவடிக்கைகள்.
  • இவையெல்லாவற்றிற்கும் மேலாக இடைத்தேர்தல் தொடர்பாக சட்டசபையிலேயே விடப்பட்ட பகிரங்க சவால்கள்
இவையெல்லாம் ஆளும் அரசுக்கு எதிராக இருப்பினும், இப்போதே வேட்பாளரை அறிவித்து, தன் ஒட்டுமொத்த அமைச்சர்களையும் தொகுதியில் உலா விட்டுருப்பதன் மூலம் அரசின் திட்டங்களும் பல உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றின் மூலம் தேர்தலை வெற்றி கொள்ளமுடியும் என நம்புகிறது எனபதே உண்மை.

அநேகமாக சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரை சட்டசபையை கூட  சங்கரன்கோவிலில்தான் நடத்துவார்கள் என்று தோன்றுகிறது, ஏனெனில் அ.தி.மு.க வின் ஒட்டு மொத்த சட்டசபை உறுப்பினர்களும் அங்கு தான் கூடாரமிட்டுள்ளனர்.

நிலைமை எவ்வாறு இருப்பினும் தற்போதய எதிர்க்கட்சிகளின் அறிவிப்பின்படி தி.மு.க மற்றும் ம.தி.மு.க கட்சிகள் மட்டுமே போட்டிக்கு தயாராக உள்ளது. மற்ற முக்கியமான கட்சிகளான தே.மு.தி.க (தமிழகத்தின் சட்டசபை எதிர்க்கட்சி) மற்றும் பா.ம.க ஆகியவை தேர்தலை புறக்கணித்திருப்பது அக்கட்சிகளின் பலமின்மையையும் அரசின் சவாலை தோல்வி பயத்தால்  எதிர்க்க யோசிப்பதுபோல் தோன்றுகிறது.

இருப்பினும் இக்கட்சிகள் தங்கள் ஆதரவை அ.தி.மு.க அல்லாத இதர போட்டியிடும் கட்சிகளுக்கு அளிக்கும் என்றே தெரிகிறது.

என்ன இருப்பினும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னமே, ஆளும் கட்சி தன் சுயபலத்தை நம்பாமல் தன் அமைச்சர் பட்டாளத்தின் துணையை நாடியிருப்பதும் வேட்பாளரின் பெயரை அறிவித்திருப்பதும் (இதை எழுதுவது வரை மாற்றப்படவில்லை) அரசிற்கு தோல்வி பயம் உள்ளதையே உணர்த்துகிறது.

எனவே வாக்களப்பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குகளை, அபிமான சின்னத்திற்கு அளிக்காமல் தங்களுக்கு அறிமுகமான, படித்த, துடிப்பான  நல்ல (ஓரளவாவது) வேட்பாளருக்கு தங்கள் வாக்குகளை அளியுங்கள்.

கூடங்குளம் - தமிழக அரசின் நிபுணர் குழு முடிவு - ஒரு பார்வை

அன்பார்ந்த நண்பர்களே!



கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்ய தமிழக அரசு இன்று ஒரு குழுவை நியமித்துள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க முடிவு என்றாலும் இது மிக மிக தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்பதை யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்றே நம்புகிறோம்.

தினசரி 8 மணிநேர மின்வெட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன் இந்த குழுவை அமைத்திருந்தால் கூட பரவாயில்லை. தற்போது இரவில் கூட 8 மணிநேரம் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைப்பதில்லை என்பது தான் உண்மை.

நம் முதல்வர் சென்ற ஆட்சியின்போது மின்வெட்டை சரிசெய்யாததால் அந்த அரசை செயல்படாத அரசு என்று கூறியதை யாரும் மறுக்கமுடியாது.

தற்போது இவ்வளவு போராட்டங்கள் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மின்பற்றாக்குறையை சமாளிக்க இந்த நடவடிக்கையை முன்பே எடுத்திருந்தால் தமிழக மக்களிடம் அரசுக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இந்த அணுமின் நிலையமானது 1988ல் முடிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து 1997ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. ரூபாய் 13615 கோடி ரூபாய் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த அணு அலை 2000 மெகாவாட் திறன் கொண்டது.

அப்படிப்பட்ட அணு உலையை ஆய்வு செய்த மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய நமது முன்னாள் ஜனாதிபதியும் உலகுக்கே இந்தியாவின் வலிமையை உணர்த்திய அணு விஞ்ஞானியுமான திரு. அப்துல்கலாம் அவர்கள், இந்த அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்றும் இதன்மூலம் அப்பகுதிக்கு எந்த பாதிப்பும் வராது எனவும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் விளக்கியது அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு இருக்கும்போது இப்போது முதல்வர் அறிவித்துள்ள குழுவை அப்போதே அறிவித்திருந்தால் தற்போது குழுவின் அறிக்கை கிடைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.

அதேபோல் இந்த கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் அவர்களுக்கு உண்மையிலேயே அந்தப்பகுதி பொதுமக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், தங்கள் போரட்டத்தை 1997ம் ஆண்டிலேயே ஆரம்பித்திருந்தால், நம்முடைய வரிப்பணத்தை முதலீடு செய்வதை தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் தற்போது நடத்தும் போராட்டத்தைப் பார்க்கும்போது மத்திய அரசு அவர்கள்மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானோ என எண்ண தோன்றுகிறது.

வெகு விரைவில் நன்மை நடக்கும் என்று நம்புவோம்.

தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்.

விரும்பினால் மற்ற நண்பர்களுக்கும் அனுப்பவும்.

தமிழ் நண்பர்களுக்கு வணக்கம்!

வணக்கம்!
வாருங்கள்...


இணையம் எனும்  பெருங்கடலில் நீந்தி 
சின்னஞ்சிறு தீவான எங்களைத்தேடி வந்திருக்கும்
இணைய உலகின் நட்பே
நீயும் எந்தன் நட்பாய் இணைந்திட 
இனிய தமிழில் பழகலாம் வாங்க

செம்மொழியாம் தமிழ்மொழியில் 
நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்வோம்