நமது ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தால் நடத்தையில் மாற்றம் உண்டாவதுடன் மனதில் குழப்பம் ஏற்படுகிறது. தேர்வு பயத்தினால் மற்ற எதிலும் ஈடுபாடின்றி இருப்பதால்
சத்தான உணவை மாணவர்கள் தவிர்ப்பதால் ஏற்படும் சத்துக் குறைபாட்டின் காரணமாக
நோய் எதிர்ப்பு சக்தியின்மையால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகிறது.
எனவே மாணவர்கள் தங்கள் உணவுப்பழக்க வழக்கங்களை கீழ்க்கண்டவாறு மாற்றுவதன் மூலம் தங்களின் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
- காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- எண்ணெயில் பொரிக்கும் உணவுவகைகளையும் கொழுப்பு உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
- காபியில் உள்ள காபின் என்ற பொருள் மந்தத்தன்மையை அதிகரிக்கும், எனவே காபி அருந்தாதீர்கள்.
- எனவே தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். வைட்டமின் பி-2 மற்றும் பி-12 சத்து கிடைக்கிறது. சுண்டக்காய்ச்சிய பாலில் புரதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
- பாலாடைக்கட்டி மற்றும் பாதாம் ஆகியவற்றில் இருந்து பி-2 வைட்டமின், வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஜிங்க் ஆகிய சத்துகள் கிடைக்கிறது.
- சுண்டல் வகைகள் மற்றும் முளைக்கட்டிய பயறு வகைகள் சாப்பிட்டால் புரதச்சத்து அதிகரிக்கும், சுறுசுறுப்பாக இருக்க உதவும். புரதம் மற்றும் தாது சத்து அதிகம் உள்ள உணவுகளால் புத்திக் கூர்மை அதிகரிக்குமென ஆய்வுகள் தெரிவிக்கிறது.
- தண்டுக் கீரையை சாப்பிடுவதன் மூலம் போலிக் ஆசிட் கிடைக்கிறது. இதனால் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் படிக்க முடியும்.
- ஆட்டு இறைச்சி உண்பதன்மூலம் இரும்பு, ஜிங்க் மற்றும் பி வைட்டமின் சத்துக்கள் கிடைக்கும், மன அழுத்தம் குறையும்.
- செர்ரிபழம் சாப்பிட்டால் மனதுக்கு உற்சாகம் கிடைக்கும்.
- சிறு கீரையுடன் மிளகுத்தூள், உப்பு போட்டு சமைத்து நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
- தக்காளி, உருளைக் கிழங்கு, வெண்டைக்காய், பாதாம் பருப்பு ஆகியவற்றை தின மும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.
- திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
- பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் மறதி குறையும்.
- பொன்னாவரைக் கீரையின் விதையை அரைத்து சாப்பிட்டு குளிர்ந்த தண்ணீர் குடித்தால் உடல் அசதி மறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
மனச்சோர்வை நீக்கும் சத்தான உணவுகள் மூலம் தேர்வு பயத்தை விரட்டி தேர்வில் வெற்றி கொள்ளுங்கள்.
மாணவச் சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்கள்.